Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்தில் இருந்து தூக்கப்பட்ட முன்னணி நடிகர்… பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (08:17 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் இருந்து பிரபுதேவா நீக்கப்பட்டுள்ளாராம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இதுவரை பஹத் பாசில்,  விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்க உள்ளனர். ஆனால் முன்னதாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபுதேவாதான் நடிக்க இருந்தார். அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி உள்ளே வந்ததும், பிரபுதேவா நீக்கப்பட்டார். ஆனால் அதை அவரிடம் முறையாக கூட படக்குழு தெரிவிக்கவில்லையாம். இதனால் அவர் மிகுந்த அதிர்சிச்யும் அதிருப்தியும் அடைந்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments