கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

vinoth
சனி, 1 நவம்பர் 2025 (14:21 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. அதனால் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வெற்றிக் கூட்டணியாக அறியப்பட்ட பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சாம் ரோட்ரிக்யூஸ் இயக்குகிறார். துபாயைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பூஜையோடு இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் பொஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் “அவனுக்கு ஐந்தாக இருந்த போது எனக்கு ஆறு வயது” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தின் போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது ‘நகைச்சுவை பேய்ப் படமாக இருக்கும்’ எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments