Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோடு மூவியில் நடிக்கும் பிரபுதேவா...?

Webdunia
புதன், 11 மார்ச் 2015 (08:04 IST)
பிரபுதேவா நடித்தால் அதிகபட்சமாக ஐந்து கோடி கிடைக்கும். அதுவே படம் இயக்கினால், 20 கோடிகள். பிரபுதேவா நடிகர் பிரபுதேவாவாக இல்லாமல் இயக்குனர் பிரபுதேவாவாக தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
 

இன்னொரு காரணம், களவாடிய பொழுதுகள். பிரபுதேவா, பூமிகா நடித்த இந்தப் படம் தயாராகி பல வருடங்கள் ஆனபிறகும் இன்னும் திரைக்கு வராமலே உள்ளது. இதன் பிறகு ஏபிசிடி இந்திப் படத்தில் நடித்தார் பிரபுதேவா. இப்போது அதன் சீக்வெலில் சின்ன வேடத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்.

இந்தியில் சிங் இஸ் பிளிங் படத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கும் நடனப்புயலுக்கு ஆந்திராவிலிருந்து ஒரு தொழில்வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கு இயக்குனர் விஜய் மடலா வைத்திருக்கும் ரோடு மூவி கதைக்கு பிரபுதேவா ஆப்டாக இருப்பார் என கருதுகிறார். பிரபுதேவா சம்மதித்தால் படத்தை தமிழ், தெலுங்கில் எடுக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.

பிரபுதேவாவின் சம்மதத்துக்காக கதையும், இயக்குனரும் காத்திருக்கிறார்கள்.

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

Show comments