புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (11:30 IST)
நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா மற்றும் சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ள 'பேட்ட ராப்' திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். 

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹீரோவாக ஆசைப்படும் பிரபுதேவா அதனை அடைய எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மசாலா தூவி சொல்லும் படமாக இருக்கும் என டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments