Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா படம் ஓடிடியில் ரிலிஸா? தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (15:40 IST)
பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார்.ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஜபக் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments