மீண்டும் இணையும் பிரபுதேவா – விஜய் கூட்டணி?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:31 IST)
இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் மறுபடியும் பிரபுதேவா இணையலாம் என்கிறார்கள்.



 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் ‘தேவி’. ஹாரர் படமான இதில், தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் ‘வனமகன்’ படத்தை இயக்கினார் விஜய். தற்போது சாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, மறுபடியும் பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை விஜய் இயக்குகிறார் என்கிறார்கள். ஹிட்டான ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். தற்போது ‘குலேபகாவலி’, ‘யங் மங் சங்’, ‘மெர்குரி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இவர் இயக்குவதாகச் சொன்ன ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments