Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் டிசாஸ்டர் ஆனதா பிரபாஸின் சலார்?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:31 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த படம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் ரிலீஸுக்குப் பின்னர் படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியது. அதனால் முதல் நாளில் இருந்தே இந்த படம் பெரியளவில் ரசிகர்களை தியேட்டர்களுக்குள் இழுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் சலார் படம் ஒரு டிசாஸ்டராக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை பல புது படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த படம் தூக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments