Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நீ ராமராக நடிக்கிறாயா? '' சூப்பர் ஸ்டாரின் கேள்விக்கு பிரபாஸ் சொன்ன பதில்...

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (17:24 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ்  ராமர் வேடத்தில் நடிப்பது பெருமை என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர்,. ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததன்  மூலம் இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார்.

பாகுபலி படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன.  பாகுபலி படத்திற்குப் பின் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஆதிபுரூஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், விரைவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படம் பற்றி பிரபாஸ் கூறியதாவது: ''ஆதிபுரூஸ் படத்தை சினிமா என்று கூறக்கூடாது. இது ராமாயணம் இப்படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம்'' என்று தெரிவித்துள்ளர்.

மேலும், ''ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை இறைவனின் அருளாக  நினைக்கிறேன்.

இப்ப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போது  நடிகர் சிரஞ்சீவி என்னிடம், நீ ராமராக  நடிக்கிறாயா என்று  கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று கூறினேன்.  அது உண்மையில் அதிர்ஷ்டம் ..அனைவருக்கும் கிடைக்காது.. உனக்குக் கிடைத்திருக்காது.. என்று சொல்லி பாராட்டினார்''  என்று தெரிவித்துள்ளார்.

ஆதிபுரூஸ் படம் வரும் 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள நிலையில், இப்பட டீசரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில்   நேற்று ஒரு டிரெய்லரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments