Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிப் போகும் பிரபாஸின் ‘ராஜா சாப்’ ரிலீஸ்… காரணம் என்ன?

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (13:05 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்தார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

ஹாரர் த்ரில்லர் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த தேதியில் அந்த படம் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தில் இன்னும் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். ஆனால் பிரபாஸ் தற்போது வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த காட்சிகள் எப்போது படமாக்கப்படும் என்றே தெரியவில்லையாம். அதனால் கண்டிப்பாக ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என சொலல்ப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..?

ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளைத் தவறவிடும் கே எல் ராகுல்… காரணம் என்ன?

லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னாரா இளையராஜா? - அவரே அளித்த விளக்கம்!

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments