Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீரென சீனா கிளம்பிய பிரபாஸ்-அனுஷ்கா

திடீரென சீனா கிளம்பிய பிரபாஸ்-அனுஷ்கா
, புதன், 7 ஜூன் 2017 (06:56 IST)
சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' படத்தின் மாபெரும் வெற்றியை விட இந்த படத்தில் செம ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்த செய்திதான் ஹாட் டாக் ஆக இருந்தது.



 


ஆனால் இந்த திருமணம் நடைபெறாது என்று பிரபாசும் அனுஷ்காவும் மாறி மாறி மறுப்பு தெரிவித்தனர். பிரபாஸ் சினிமா அல்லாத பெண்ணை மணக்கவுள்ளதாகவும், அனுஷ்கா பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிரபாஸ் மற்றும் அனுஷ்கா சீனா செல்கின்றனர். 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது போலவே 'பாகுபலி 2' படத்தையும் பிரமாண்டமாக வரும் ஜூலையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை சீனாவில் புரமோஷன் செய்யவே பிரபாசும் அனுஷ்காவும் சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் இடத்திற்கு செல்கிறார் சீயான் விக்ரம்