பிரபாஸின் படம் ரூ.225 கோடி நஷ்டம்...

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (21:06 IST)
பிரபாஸின் ஆதிபுரூஸ் படம் ரூ.225 நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவான படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்திருந்தார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியான இப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி  கடுமையான விமர்சனங்களை சந்தித்து, சர்ச்சையில் சிக்கியது.

இந்தப் படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்ட  நிலையில், ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

பாகுபலி1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிரபாஸின் ராதே ஸ்யாம் , சாஹோ ஆகிய படங்களின் வரிசையில், ஆதிபுரூஸ் படமும் தோல்வியடைந்தது.

எனவே பிரபாஸின் அடுத்துவெளியாகவுள்ள சலார் மற்றும் Kalki 2898 AD  படங்கள் வசூலில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments