Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன பிரபாஸுக்கு வந்த சோதனை?

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (12:37 IST)
பாகுபலி2 மாபெரும் வெற்றிக்கு பின், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் தோல்வி அடையும் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.


 

 
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்காக மொத்தம் 4 வருடங்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் பிரபாஸ். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதிலும் பாகுபலி2 இந்திய சினிமா உலகில் எந்த படமும் வசூல் செய்யாத அளவுக்கு ரூ.1500 கோடியை தாண்டி சென்று விட்டது.
 
பிரபாஸ் அடுத்து சுஜீத் என்பவர் இயக்கும் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்காவே நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
பொதுவாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது, இயக்குனர் ராஜமௌலியின் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் அடுத்த படம் கண்டிப்பாக தோல்வி அடையும் என்பதுதான் இது.
 
இதற்கு முன் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ரவிதேஜா ஆகியோர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஹிட் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த நடிகர்களின் அடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவேதான், பாகுபலி2 -விற்கு பின் பிரபாஸ் நடிக்க இருக்கும் சாஹோ தோல்வியடையும் என அடித்து கூறுகிறார்கள் சில தெலுங்கு சினிமாகாரர்கள்.
 
அவர்களின் நம்பிக்கையை சாஹோ பொய்யாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அலங்காரப் புடவையில் ஹோம்லி லுக்கில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்!

மினி ஸ்கர்ட் உடையில் கிளாமர் ஏத்தும் அதுல்யா ரவி… லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணம்: கமல்ஹாசன் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments