Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ராமநாதபுரம் நீதிமன்றம்!

Power Star Srinivasan
Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (13:40 IST)
லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார்.

ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இரால் பண்ணை அதிபர் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜாராகததால் அவருக்கு இப்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது ராமநாதபுரம் நீதிமன்றம். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தாமதத்துக்கு சூர்யாவின் ‘கங்குவா’தான் காரணமா?

புற்றுநோய் எனப் பரவிய வதந்தி… விளக்கமளித்த ம்ம்மூட்டி தரப்பு!

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

மோகன்லாலின் ‘எம்பூரான்’ படத்தில் இருந்து விலகியதா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

பிரபுதேவா இயக்கத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்?

அடுத்த கட்டுரையில்
Show comments