Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் சிக்கி பலி!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (11:07 IST)
பிரபல சின்னத்திரை நடிகை ரேகா சிந்து வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது   விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

 
சென்னையில் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக ரேகாசிந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். மூன்று பேருடன் பெங்களூர் சென்று கொண்டு இருந்தார். சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பேரணாம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, சுண்ணாம்பு குட்டை என்ற இடத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதே இடத்தில் ரேகா பலியானார். 
 
நடிகை ரேகா சிந்துவுடன் சென்ற அபிஷேக் குமரன் (22), செங்கல்பட்டைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (23), சென்னையைச் சேர்ந்த ரக்ஷன் (20) ஆகிய மூன்று பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்த ரேகா தமிழ், கன்னடம் மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர். தற்போது அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து  செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments