Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் ‘தலைவி’ படத்தில் இணைந்த ‘காப்பான்’ நடிகை

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (17:59 IST)
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்து வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்றும் வரும் மார்ச் இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் சோபன்பாபு கேரக்டரில் வங்காள மொழி நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே இதனை அடுத்து தற்போது புதியதாக இந்த படத்தில் பிரபல நடிகை பூர்ணா இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளியான சூர்யா, ஆர்யா, நடித்த ’காப்பான்’ திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல தமிழ் திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
‘தலைவி’ திரைப்படத்தில் யாருடைய கேரக்டரில் பூர்ணா நடித்து வருகிறார் என்பது குறித்து ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தாலும் இவர் வெண்ணிற ஆடை நிர்மலா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய இருவரும் ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனார்கள் என்பதும் பின்னாளில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் அரசியல்வாதியாக ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments