Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த போட்டோவுல இருக்குற குழந்தை யாருனு தெரியுதா? இவங்க தான் இப்போ டாப் நடிகை!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (15:36 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். 
 
தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை  லிஸ்டில் இடம் பிடித்தார். துவ்வட ஜெகந்நாதம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து ரங்கஸ்தலம் , மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. 
 
தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டேவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments