Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

vinoth
திங்கள், 20 மே 2024 (14:41 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் ரிலீஸ் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளராக திருவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments