விஜய் தேவரகொண்டா & பூரி ஜெகன்னாத்தின் JGM… ஹீரோயின் இவரா? வெளியான தகவல்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (08:59 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கும் JGM படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஜய் தேவாரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்  படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட அது கவனத்தை ஈர்த்தது. படத்துக்கு JGM (ஜன கன மன) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் ராதே ஷ்யாம் படங்களின் மூலம் கவனம் பெற்ற பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்புல் தற்போது பூஜா இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments