Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின்செல்வன் -2 படம் ஒருநாள் முன்னதாக இந்த நாட்டில் ரிலீஸ்!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (20:47 IST)
பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில்  வெளியாகும் என்ற தகவல் வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

இதையடுத்து, இப்படதிதின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளதால், சமீபத்தில்,  படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது.

இப்படம் படம் 2மணிநேரம் 37 நிமிடம் 33 விநாடி ரன்னிங் டைம் என்று கூறப்படும் நிலையில், இப்படத்தின்  மூன்றாம் பாகமும் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது படம் 4DX என்ற அதிநவீன தொழில்நுட்பத்தோடு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே இப்படம் ரிலீஸாகும் எனவும், இதற்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்கும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வி சொல்லும் பாடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments