Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசரில் கூட காட்டாத மதுராந்தக தேவர் கேரக்டர்! – லைகா வெளியிட்ட போஸ்டர்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (14:04 IST)
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் இரு தினங்களில் வெளியாக உள்ள நிலையில் புதிய கதாப்பாத்திரங்களின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சரித்திர படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களான “பொன்னி நதி” மற்றும் “சோழா சோழா” ஆகியவை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுராந்தக தேவர், சுந்தர சோழர், செம்பியன் மாதேவி ஆகியோரின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மதுராந்தகராக ரகுமானும், சுந்தர சோழராக பிரகாஷ் ராஜும், செம்பியன்மாதேவியாக ஜெயச்சித்திராவும் நடித்துள்ளனர். சுந்தர சோழர் தவிர்த்த மற்ற இரு கதாபாத்திரங்களும் டீசரில் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments