Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பொன்னியின் செல்வன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அறிவிப்பு..!

’பொன்னியின் செல்வன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அறிவிப்பு..!
Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (18:18 IST)
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை புரமோஷன் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

ரிலீஸை நெருங்கிய ‘வீர தீர சூரன்’… விக்ரம் முதல் உதவி இயக்குனர்கள் வரை பலருக்கு சம்பள பாக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments