Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 'கோட்’ வெளியாகும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு! என்ன காரணம்?

Mahendran
வியாழன், 5 செப்டம்பர் 2024 (10:23 IST)
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் 'கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தியேட்டரில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

உதவி ஆணையர்கள் மேற்பார்வையில், 3 காவல் ஆய்வாளர்கள் தலையில், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட 30 மேற்பட்ட காவல்துறையினர் ஒவ்வொரு திரையரங்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இன்று காலை நான்கு மணிக்கு காட்சிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் 'கோட்’ காட்சிகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நேற்று இரவு முதலே ரசிகர்கள் 'கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் குவிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருந்தனார் என்பதும் இன்று அதிகாலை முதலே அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மட்டுமே திரையரங்குகளில் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுக்கள் இல்லாமல் விஜய் படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் பேனர்கள் வைக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் விஜய் ரசிகர்கள் அதிருப்தியுடன் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments