Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் தைரியமாகச் சொல்லலாம்... என் தங்கச்சி படிச்சவ

அஜீத் தைரியமாகச் சொல்லலாம்... என் தங்கச்சி படிச்சவ
, செவ்வாய், 26 மே 2015 (09:29 IST)
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, நடிகை லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்ததாக சிலர் செய்தி வெளியிட்டனர். லட்சுமி மேனன் படித்தது மத்திய அரசின் பாடத் திட்டத்தில் அமைந்த சி.பி.எஸ்.இ. எந்த பாடத் திட்டத்தில் அவர் படித்தார் என்பதை அறியாமலே அவரை தோல்வியடையச் செய்தனர்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு நேற்று ரிசல்ட் வெளியானது. லட்சுமி மேனன் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கடுமையாக உழைத்ததுக்கு கிடைத்த பலன் என்று கூறியிருப்பவர், தனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
 
லட்சுமி மேனன் தற்போது அஜீத்தின் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார். லட்சுமி மேனனை அஜீத் கல்லூரிக்கு அழைத்துச் செல்வது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
 
படத்தின் கதைக்கும், நிஜத்துக்கும் எப்போதாவது இதேபோல் ஒத்துப் போவதுண்டு.

Share this Story:

Follow Webdunia tamil