Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை மட்டும் தயவுசெய்து கேட்காதீங்க: என்.ஜி.கே தயாரிப்பாளர்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (07:23 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'என்.ஜி.கே. படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் சூர்யா ரசிகர்கள் படக்குழுவினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் என்.ஜி.கே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் என்.ஜி.கே. பாடல்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த படத்தில் இரண்டு ஜாம்பவான்களான செல்வராகவன், சூர்யாவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. பாடல்கள் தயாராக இருந்தாலும், பாடல் வெளியீடு எப்போது? என்று மட்டும் தயவுசெய்து யாரும் கேட்க வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments