Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இணைந்த பீட்சா ஜோடி

மீண்டும் இணைந்த பீட்சா ஜோடி
, வெள்ளி, 27 மார்ச் 2015 (14:43 IST)
விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே புத்துணர்ச்சியாக அமைந்த படம், பீட்சா. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீஸன் அதில் நடித்திருந்தனர். இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைகிறது.
 

 
பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கிறார் அல்லவா? விஜய் சேதுபதி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீஸன் நடிக்கிறார். 
 
வாசன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கஇ தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil