Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு 2 தாமதம்- பர்பெக்‌ஷன் பார்க்கும் மிஷ்கின்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:50 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணி தற்போது நடந்து வருகிறது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும், இயக்குனர் மிஷ்கினும் செய்து முடித்துள்ளனர். அடுத்த கட்டமாக படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளை இப்போது மேற்பார்வையிட்டு வருகிறாராம் மிஷ்கின். கேஜிஎப் படத்துக்கு பணிபுரிந்த கிராபிக்ஸ் குழுதான் இந்த படத்துக்கு பணிபுரிகிறதாம். ஆனால் காட்சிகளில் அதிகமாக பர்பெக்‌ஷன் பார்க்கும் மிஷ்கினால் தாமதம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments