Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிசாசு 2" படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த மிஷ்கின்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:44 IST)
மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள திரைப்படம் பிசாசு. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். அடுத்த மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மிஷ்கின் படங்களில் எப்போதும் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதிலும் குறிப்பாக பின்னணி இசை மிகவும் உணர்வுப் பூர்வமாக இருக்கும். அது இளையராஜாவாக இருந்தாலும் சரி, அரோல் கொரோலி மற்றும் கே போன்றவர்களாக இருந்தாலும் சரி… அவர்களிடம் இருந்து தனித்துவமான இசையை வாங்கிவிடுவார் மிஷ்கின்.

இந்நிலையில் அவரின் பிசாசு 2 படத்துக்கு அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல், அவரின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவை இசையமைத்து வருகிறார். படத்தின் இசை பணிகள் துவங்கி தற்ப்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து " பிசாசு படத்தின் மியூசிக் கம்போசிஷன் துவங்கிவிட்டதாக கூறியுள்ளார். இந்த பாடல்களை கேட்க ரசிகர்கள் அதிக ஆர்வம் அடைந்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments