Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் தயாராகும் திருட்டு டிவிடி

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (16:32 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தலைமையில் சங்க நிர்வாகிகள் மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது -
 

 
தற்போது ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்களில் திரையிடப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி சினிமா தியேட்டர்களிலேயே திருட்டு டிவிடிகள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் கேரள மாநிலத்தில் திரையிடப்பட்டிருந்தது.
 
அங்குள்ள தியேட்டர் ஒன்றில் கியூப் தொழில்நுட்ப முறையில் திருட்டு டி.வி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை உரிய விசாரணை நடத்தி தடுக்கவேண்டும். இதற்கு துணைபோகும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
- இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments