Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (18:41 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விஜய் ஆண்டனி ஜோடியாக காவியா தபார் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, ஜான்விஜய் உள்பட பல நடித்துள்ளனர். 
 
விஜய் ஆண்டனி இசையில், விஜய் ஆண்டனி ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments