Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதா திருமணத்தை எதிர்த்து போலீசில் புகார் அளித்த பீட்டர்பால் முதல் மனைவி!

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (10:52 IST)
நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகிய இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடந்த நிலையில் பீட்டர் பால் மீது அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பீட்டர் பால் என்பவருக்கும் எலிசபெத் ஹெலன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறு காரணமாக இருவரும் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனக்கு முறையாக விவாகரத்து கொடுத்துவிட்டு தான், வனிதாவை திருமணம் செய்யவிருப்பதாக ஹெலனிடம் பீட்டர்பால் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் விவாகரத்து அளிக்கும் முன்னரே வனிதாவை அவர் திருமணம் செய்து கொண்டதாக எலிசபெத் கேலன் தற்போது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விவாகரத்து நடை முறையை பின்பற்றாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எலிசபெத் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 திருமணங்கள் சர்ச்சையில் முடிந்த நிலையில் தற்போது வனிதாவின் மூன்றாம் திருமணத்திலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments