Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் “புரடக்சன் நம்பர் 36”, சூப்பர் யோதா படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது !!

J.Durai
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:29 IST)
சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு,  சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன்  இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி  “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது.  தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார்.  அவரது முந்தைய படத்தில்  பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய  ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி  சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
 
ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி  இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும், ஈகிள் படம் போலவே இப்படமும்  புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அற்புதமான திரைக்கதை வல்லுநரான கார்த்திக் கட்டம்நேனி, இது சூப்பர் யோதாவின் சாகசக் கதையில், தேஜா சஜ்ஜாவை பிரம்மாண்டமாக காட்டவுள்ளார். 
 
இந்திய அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால், படம் உலகளாவிய தரத்துடன் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும். 
 
படத்தின் மற்ற விவரங்களும் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments