Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்!

‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்!

Webdunia
வியாழன், 12 மே 2016 (12:17 IST)
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.


 


தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. 
 
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது, 
 
நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன. 
 
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் அழகுப் பதுமையாய் மின்னும் பூஜா ஹெக்டே… புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 44 ஷூட்டிங் ஓவர்… முழுக் கவனமும் கங்குவா மேலதான்… ஆடியோ ரிலீஸ் எப்போது?

மீண்டும் இயக்குனர் ஆகும் ரேவதி… இந்த முறை வெப் சீரிஸ்!

அடுத்த கட்டுரையில்