Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்வதியின் பாலிசி - எதுக்கும் தெரிஞ்சி வச்சுக்குங்க

பார்வதியின் பாலிசி - எதுக்கும் தெரிஞ்சி வச்சுக்குங்க
, சனி, 9 ஜனவரி 2016 (10:23 IST)
என்னை பார்வதி மேனன் என்று அழைக்காதீர்கள், பார்வதி என்றே குறிப்பிடுங்கள் என்று சாதியை தள்ளி வைத்து, தமிழர்களிடம் தனிக்கவனம் பெற்றுள்ளார் 'பூ' பட நாயகியான பார்வதி.


 

 
இவர் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை, கடை திறப்பு விழாக்களுக்கு செல்வதில்லை என பாலிசி வைத்துள்ளார். ஏன் அப்படி?
 
பெங்களூர் நாள்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதற்கு பார்வதி விளக்கமளித்தார்.
 
"நடிகைகளின் நடிப்பை மட்டும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் பாத்திரங்களை மட்டும் ரசிக்க வேண்டும்.
 
நடிகைகள் பொதுவான சொத்து அல்ல. அப்படியாரும் பார்க்க வேண்டாம். இதற்காகவே நான் படங்களில் மட்டும் நடிக்கிறேன்.
 
விளம்பர படங்களில் நடிப்பதில்லை. அது என் வேலையல்ல. திறப்பு விழாக்களுக்கும் செல்வது இல்லை."
 
பார்வதி என்றில்லை, எந்த பெண்ணுமே பொதுச் சொத்தில்லை. ஆண்களின் உலகிற்கு ஆணி அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் பார்வதி. புரிந்து நடப்பார்களா ஆண் மக்கள்?

Share this Story:

Follow Webdunia tamil