சீமானை கடுப்பாக்கிய துக்ளக் தர்பார் – நேரடி விளக்கம் தந்த பார்த்திபன்

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (12:00 IST)
விஜய் சேதுபதி நடித்து வெளியாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டீசர் காட்சிகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் பிரசாத் தீனதயாளன் இயக்கி விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இதில் நடிகர் பார்த்திபன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இதன் டீசர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பார்த்திபன் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘ராசிமான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன் “நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments