Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் இட்லி கடை படத்தில் பார்த்திபன்.. அவரே சொன்ன உண்மை..!

Mahendran
சனி, 16 ஆகஸ்ட் 2025 (11:50 IST)
தனுஷின் இட்லி கடை படத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. 
 
இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு,எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்
 
இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அனிருத்துக் கல்யாணம் எப்போது?... கையை விரித்த ராக்ஸ்டாரின் தந்தை!

தள்ளிப் போகிறதா ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி?

19 வயதில் பல முட்டாள்தனமான விஷயங்களைப் பேசிவிட்டேன் – பிபாஷா பாஸு உருவக் கேலிக்கு மிருனாள் வருத்தம்!

கூலி படத்தில் நடிக்க இத்தனை கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதா?... அமீர்கான் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments