Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித்தை பாராட்டி டுவீட் பதிவிட்ட பார்த்திபன்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:54 IST)
துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல் என்று நடிகர் பார்த்திபன் டுவீட் பதிவிட்டுள்ளார்.
 

போனி கபூர்- ஹெச்.வினோத்-  நடிகர் அஜித்குமார் கூட்டணியில் 3 வதாக உருவாகியுள்ள படம் துணிவு.

 நடிகர் அஜித்துடன் இணைந்து  மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கல் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் அஜித்குமார் வெள்ளை முடியுடன் இப்பட்த்தில் நடித்துள்ளதற்கு சக நடிகர்கள், இயக்குனர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிகர் அஜித் பற்றி தன் டுவிட்டரில், வேள்பாரி யாரோ?
வாள்பாரி நானே!
ஆயிரத்தில் ஒருவனும்,பொன்னியின் செல்வனும் எனக்கொரு ராஜகம்பீரத்தை தந்திருப்பதும்,

’சுழல்’ சூழ் வரவேற்பும்,

’இரவின் நிழல்’ இளைய இதயங்களை லயமாக என் வயப்படுத்நியிருப்பதும் நுங்கும் நுரையுமாய் பொங்கி வழியும் நிறைவே!  

குண்டு’ம் குழியுமாய் இருந்த என் பாதைகள் செப்பனிடப்பட்டு(dieting +workouts)புதிய பாதைக்கு மீண்டும் தயாராகி வருகிறேன்.

வயதென்பதென்ன?

வெட்டவெளிதனில் நட்ட கருங்கல்லா நகராமல் நின்றுவிட!கடிகார முட்கள் jagging செல்லும் போது எதிர்திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கும் இலையுதிர் மரங்களே இருந்தால் சீவி சிங்காரித்துக் கொள்வதும்,கொட்டிவிட்டால் மயிரே போச்சி”என ’Chilla  chilla’பாடியே

(நரையைக்கூட மைப்பூசி மறைக்காமல்

திரை கிழியும் விசிலுடன் அஜீத்தி) துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல்!

புதிய சொல் பொருள்
அஜீத்தி = அசத்தி என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments