ஒரே ஷாட்டில் மொத்த படமும் – பார்த்திபனின் அடுத்த வித்யாசமான முயற்சி !

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (07:28 IST)
இயக்குனர் பார்த்திபன் அடுத்ததாக இயக்கும் இரவின் நிழல் என்ற படமும் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments