Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குனருக்கு தூது விட்ட சிவகார்த்திகேயன் & ஜெயம் ரவி!

vinoth
புதன், 22 மே 2024 (17:56 IST)
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங்.

இந்த படம் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பு மொழி தாண்டியும் கிடைத்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வெளிநாட்டு மொழி ரீமேக்கும் அடக்கம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராம்குமாரிடம் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களுக்காக கதை கேட்டு தூது விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments