Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காலா'வுக்கு முன் ரிலீஸ் ஆகும் ரஞ்சித்தின் அடுத்த படம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (22:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கான முன்பதிவும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாகவில்லை எனினும் மற்ற இடங்களில் இந்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் 'காலா' படத்தை இயக்கி வந்த இயக்குனர் பா.ரஞ்சித், 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'காலா' ரிலீசுக்கு முன்னரே 'பரியேறும் பெருமாள்' டீசர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள 'பரியேறும் பெருமாள்' படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments