Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராசக்தி பட டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்! தொடங்கியது அடுத்த பிரச்சனை!

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:08 IST)
தமிழ் சினிமாவின் ஒரு கல்ட் கிளாசிக் படமாக 73 ஆண்டுகளாக திகழ்ந்து வருவது பராசக்தி. அந்த படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர் நடிக்கும் படங்களின் டைட்டிலும் பராசக்தி என்று நேற்று வெளியானதை தொடர்ந்து இருதரப்பு மாறி மாறி தங்களுடைய டைட்டிலுக்கான ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் சிவகார்த்திகேயன் படத்திற்கு இரண்டு மொழிகளுக்கும் பராசக்தி என்ற டைட்டிலை வைத்துக்கொள்ள விஜய் ஆண்டனி படக்குழு ஒப்புக்கொள்ள, விஜய் ஆண்டனியின் படத்துக்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘பராசக்தி’ தலைப்பு வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு இந்த தலைப்பை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறையாகப் பெற்றுள்ளது. இந்நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பராசக்தி படத்துக்கு ஏவிஎம் நிறுவனம் பைனான்ஸ் செய்ய நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்தான் தயாரித்திருந்தார். அதனால் இப்போது இந்த டைட்டில் பிரச்சனை இப்போது வேறு ரூபம் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல் படமே பராசக்தி கதை தான்.. விக்ரம் நடிக்க இருந்தார்.. இயக்குனர் வசந்த பாலன்

முடிந்தது பராசக்தி டைட்டில் பிரச்சனை.. இரு தரப்பும் சமூக உடன்பாடு..!

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

அடுத்த கட்டுரையில்
Show comments