Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமூக சேவையோடு படத்தை அறிமுகம் செய்த 'பப்பரப்பாம்' படக்குழுவினர்

சமூக சேவையோடு படத்தை அறிமுகம் செய்த 'பப்பரப்பாம்' படக்குழுவினர்
, திங்கள், 24 நவம்பர் 2014 (12:33 IST)
இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளரும், 'உறுமி' படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள படம் ''பப்பரப்பாம்''. 
'நான் மகான் அல்ல', 'யாழ்' படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். சதுரங்கவேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை ஜெனிஷ், சூப்பர் சிங்கர் புகழ் அழகேசன் உட்பட இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் படக்குழுவினர்  கிட்டத்தட்ட நூறுபேர் கலந்துகொண்டு பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளை முழுவதுமாக சுத்தம் செய்தனர். 
 
இப்படி சுத்தம்  செய்து  தங்கள் படத்தை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைப்பதாகவும், இது இத்தோடு நிற்காமல் படம் வெளியாகும் வரை இதே குழுவோடு வேறு வேறு இடங்களில் எங்கள் பணியைத் தொடர்வோம் என்றும்  கூறினார் இயக்குனர் சசிகுமாரன். 
 
நாங்களும் சுத்தம் செய்கிறோம் என்கிறமாதிரி போஸ் கொடுத்துவிட்டு ஓடிவிடாமல் அடிக்கிற வெய்யிலில் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த சுத்தம் செய்யும் பணி மாலை ஆறுமணி வரை குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம் செய்ததை பார்த்த அந்த ஏரியா மக்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர். அந்த சாலையே அரசியல்வாதிகள் கூட்டம்போடும் நாளில் சாலை எப்படி பளிச்சென்று இருக்குமோ அவ்வளவு சுத்தமாக இருந்தது.  ஐம்பது குப்பைத்தொட்டிகளை அந்த சாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் பப்பரப்பாம் படக்குழுவினர். 
 
மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய ஒரு கதை பப்பரப்பாம். ஒளிப்பதிவு சண்முகசுந்தரம், இசை கே எஸ் ரோஸ், எடிட்டிங் கே எம் ரியாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil