Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநியோகஸ்தர்களுடன் சமரசம் - திட்டமிட்டபடி வெளியாகிறது பாபநாசம்

விநியோகஸ்தர்களுடன் சமரசம் - திட்டமிட்டபடி வெளியாகிறது பாபநாசம்
, ஞாயிறு, 28 ஜூன் 2015 (09:46 IST)
கமல் நடித்துள்ள பாபநாசம் படத்துக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய அவசர கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டது.


 


 
உத்தம வில்லன் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் திருப்பதி பிரதர்ஸுக்கு ஒரு படம் நடித்துத்தர கமல் ஒப்புக் கொண்டிருந்தார்.
 
அந்தப் படத்தில் நடிக்காமல் சொந்தப் படம் தூங்கா வனத்தை தொடங்கியதால் கமலின் பாபநாசம் படத்துக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என அறிவித்தனர்.
 
இந்நிலையில் கமல் தரப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஜுலை 3 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil