Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி, ஜி.வி.பிரகாஷை இயக்கும் பாண்டிராஜ்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (11:57 IST)
தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கார்த்தி, ஜி.வி.பிரகாஷை இயக்கப் போகிறார் பாண்டிராஜ்.



‘இது நம்ம ஆளு’ ரிலீஸாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால், அடுத்த படத்துக்கு இன்னும் பூஜை போடவில்லை பாண்டிராஜ். இருந்தாலும், தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ படத்தை, தன்னுடைய ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டிராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கெனவே வெளியான ‘பசங்க 2’ படத்தை, சூர்யா மற்றும் பாண்டிராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஜி.வி.பிரகாஷை வைத்து விரைவில் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். பாண்டிராஜின் உதவியாளர்களான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய ‘புரூஸ் லீ’, வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ ஆகிய இரண்டு படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments