பித்தலாட்டம் செய்த பாண்டவர் அணி? – பரபரப்பான தேர்தல் களம்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:55 IST)
இன்று நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பாண்டவர் அணியினர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் “ஓட்டு விண்ணப்பங்களை ஒரு கவரில் சுருட்டி ஒருவர் எடுத்து சென்றார். அது என்னவென்று தெரியாததால் நான் விசாரித்தேன். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இதுகுறித்து பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசிடம் இது குறித்து கூறினேன். நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் அதை ஓட்டு பெட்டிக்குள் போட முயற்சித்தார். நாங்கள் அதை கைப்பற்றி நீதிபதியிடம் ஒப்படைத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ் “இதுகுறித்து நீதிபதியிடம் புகார் அளித்துள்ளோ. எங்கள் கண்முன் நடந்தது இது. தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடந்தது என தெரியவில்லை. இந்த பித்தலாட்டத்தை செய்ய முயற்சித்தவர் பாண்டவர் அணியை சேர்ந்தவர்” என கூறினார்.

கடைசியாக பேசிய பாக்யராஜ் “தேர்தலை நல்லப்படியாக நடத்தி கொடுத்த காவல்துறைக்கு நன்றி. இன்றைய தேர்தலில் விதிமீறல்கள் நடக்காமல் இல்லை. அதுகுறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை பாண்டவர் அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments