Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாயும் புலி திட்டமிட்டபடி திரைக்கு வருமா? - தொடங்கியது பேச்சுவார்த்தை

பாயும் புலி திட்டமிட்டபடி திரைக்கு வருமா? - தொடங்கியது பேச்சுவார்த்தை
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (12:24 IST)
பாயும் புலி படம் செப்டம்பர் 4 திரைக்கு வருவதாக அறிவித்து விளம்பரமும் செய்து வந்தனர்.


 


இந்நிலையில், லிங்கா படத்திற்கு நஷ்டஈடு தராததை முன்வைத்து, வேந்தர் மூவிஸ் தயாரித்திருக்கும் பாயும் புலியை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் காஞ்சிபுரம் ஏரியாக்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
 
அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. செப்டம்பர் 4 திட்டமிட்டபடி பாயும் புலி வெளிவருமா என்பது இன்னும் குழப்பமாக இருக்கும் நிலையில், நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வேந்தர் மூவிஸை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil