Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாயும் புலிக்கு தடையா? தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர் அறிக்கை

பாயும் புலிக்கு தடையா? தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர் அறிக்கை
, வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (13:30 IST)
லிங்கா படத்தின் நஷ்டஈட்டை தராவிடில் வேந்தர் மூவிஸின் பாயும் புலி படத்துக்கு தடை விதிப்போம் என நேற்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 

 
ராக்லைன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘லிங்கா’ திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகைக்காக ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி’ தமிழ் திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடைவிதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. 
 
இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மேலும், இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல். ‘லிங்கா’வில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ‘பாயும் புலி’ திரைப்படத்துக்கு தடை விதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல. 
 
எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி தடையை நீக்காதபட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். 
 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil