Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.விஜய்யின் ஸ்ட்ராபெர்ரி - வரிச்சலுகைக்காக பெயர் மாறப் போகும் அடுத்தப் படம்?

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (15:11 IST)
ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டே மாஸ் என்று பெயர் வைத்து, இது ஆங்கிலமாச்சே என்றதும் மாசிலாமணியின் சுருக்கம்தான் மாஸ் என்று போங்காட்டம் ஆடினர்.
 
ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் ஏற்காததால் மாஸு என்கிற மாசிலாமணியாக பெயரை மாற்றினர். அதுவும் செல்லுபடியாகாமல் மாசு என்கிற மாசிலாமணியாக மூன்று நாளில் பல பெயர்கள் மாறியது வெங்கட்பிரபுவின் படம். அதேபோன்றதொரு நிலை பா.விஜய்யின் படத்துக்கு ஏற்படுமா?
 
பா.விஜய் ஹீரோவாக நடித்த இரு படங்களும் தோல்வியை தழுவ, மூன்றாவது படம் வெளியாகாமலே உள்ளது. அதனால் அவரே கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம்தான், ஸ்ட்ராபெர்ரி. 30 சதவீத வரிச்சலுகை இல்லையென்றால் மாஸ் நடிகர்களின் படங்களையே விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஸ்ட்ராபெர்ரியை எப்படி அவர்கள் விரும்பி வெளியிடுவார்கள்?
 
கடைசி நேரத்தில் ஸ்ட்ராபெர்ரியை ஜுஸ் போட்டுவிடப் போகிறார்கள்.

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

Show comments