Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன… பா ரஞ்சித் கொடுத்த அப்டேட்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (14:52 IST)
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இப்போது அவர் விக்ரம்மை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் சார்பட்டா பரம்பரை 2 பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களை விட அவர் கமல்ஹாசனோடு இணைய உள்ளதாக வெளியான தகவல்கள்தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதுபற்றி இப்போது பேசியுள்ள ரஞ்சித் இப்போதுதான் அந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறாராம். இதை அவரே பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளதால், இப்போதைக்கு அந்த படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments