Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா 2 படத்துக்காக தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்கும் ஆர்யா!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (10:59 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. படத்துக்கு பட்ஜெட்டாக சுமார் 80 கோடி ரூபாயை இயக்குனர் ரஞ்சித் கூறினாராம். இதனால் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களில் ஒன்றான ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதால் தற்போதைக்கு அந்த படம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் ஆர்யாவே ஏற்கவுள்ளாராம். அதனால் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments