Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (08:49 IST)
பா.ரஞ்சித் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘இரண்டாம் உலகக்ப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின்னர் 'மெட்ராஸ்' என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பின்னர் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.
 
படங்களை இயக்குவது மட்டுமின்றி தரமான படங்களை தயாரிக்கவும் முடிவு செய்த பா.ரஞ்சித், 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவை கெளரவப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்தது மட்டுமின்றி படக்குழுவினர்களை பாராட்டியும் உள்ளனர். இதுகுறித்து பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ‘தணிக்கைகுழுவின் பாராட்டுதலோடு குண்டு படத்திற்கு  " U " சான்றிதழ். மகிழ்ச்சி..! என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். தென்மா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments